Tagged: மணியரசன்

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

கொஞ்ச காலமாகவே பெரியார் மீது பல்வகை திறனாய்வுக் கணைகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. தூற்றுதலாக இல்லாமல் திறனாய்வாக வந்தால் வரவேற்க வேண்டியது தான்; திறனாய்வு உள்நோக்கமின்றி வந்தால் வரவேற்க வேண்டியது தான்; உள்நோக்கத்தோடு வந்தாலும் ஆதாரத்தோடு இருந்தால் வரவேற்கவேண்டியது தான். என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக் கின்றனர்; பலபட எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றாக, “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது. அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார். “1916ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சம°கிருதத்தையும், ஆரியப் புரோகிதர்களையும்...