Tagged: பேய்ப்படம்

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

“பேய் இருக்கா, இல்லையா?” “நம்பலாமா? நம்பப்படாதா?” என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதற வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே சமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவிகளைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம். தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் ‘ரொமான்டிக் லுக்’ விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப்படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே ஒரு நூறை நெருங்கும். ‘யார்’, ‘மை டியர் லிஸா’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13-ம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’ போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், ‘யாவரும் நலம்’, ‘பீட்சா’ போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக ‘யாமிருக்க பயமே’ என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே...