காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...