Tagged: பசுமைத் தாயகம்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...