‘நோக்கியா’ சுரண்டலுக்கு துணை போகும் ஆட்சிகள்
இந்தியாவில் அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித் துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத் துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின் குறியீடாக இங்கு உருவகப்படுத்தப் பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச் சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம் வாரியிறைக்கப்படு கிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப் பாடற்ற சுதந்திர போக்கு மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படு கிறது. இவர்களின் எதிர்பார்ப்பின்படி இம் முதலீடுகள் நாட்டை வளமாக்க வில்லை. மாறாக இந்திய அரசு அளிக்கும் அத்துனை சலுகைகளை யும் அனுபவிப்பதோடு, சட்ட விரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக் கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன விவகாரங்களை கொண்டே விளங்க முடியும். தமிழக அரசின் ஒப்பந்தம் ஏப்ரல் 2005இல்...