Tagged: திருவாரூர் கே.தங்கராசு

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

சென்னை திருவான்மியூர் ‘குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை’ சார்பில், 16.3.2014 ஞாயிறு அன்று திருவாரூர் கே.தங்கராசு படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மரு.அ.சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் தங்கராசு படத்தை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணியும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினர். ‘அறிவின் வழி’ மாத இதழ் ஆசிரியர் கவிஞர் குடந்தையார் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 19062014 இதழ்