Tagged: டேவிட்

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

7.5.14 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் “உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை” கட்டுரை கண்டேன். இது சம்பந்தமான கடந்தகால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1961-1962 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசுப் பணியாற்றி வந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை. ஒருமுறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்ல பஸ் ஏறினேன். பஸ் புறப்பட்ட அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இருந்த மூன்று பார்ப்பனர்கள், கண்டக்டரிடம் பேருந்தை நிறுத்திச் சொல்லி தமது பூணூலையும் மேலாடையை யும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டேவிட் பஸ்சுல இருக்காண்டா’ என்று சத்தம் போட்டு சொல்லிக் கெண்டு பேருந்தைவிட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியதைப் பார்த்தேன். அணைக்காடு சுயமரியாதை வீரர் டேவிட் கண்ணில் பட்டால் பார்ப்பனர்களின் பூணூல் தப்பாது என்பதை உணர்ந்தேன். பார்ப்பனர்கள் நம் மீது குதிரை சவாரி செய்யலாம் என்ற மதவாத திமிர் போக்கை மாற்றிக் கொண்டு மனிதனாக மாறவேண்டும். இப்போது ஆட்சி அதிகாரத்தை நம்பி ஆட்டம் போட்டால்...