தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா
திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...