Tagged: சமஸ்கிருத வருடங்கள்

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழருக்கான ஆண்டு கணக்கு. இதற்கு மாறாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் தமிழர்கள் மீது திணித்தனர். அந்த தமிழ்ப் புத்தாண்டுகளுக்கு 60ஆம் ஆண்டு கணக்குகள் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுகூட தமிழ்ப்  பெயரே இல்லை. அத்தனையும் வடமொழிப் பெயர்கள். 60 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் வாழ்வோரை இந்த வடமொழிப் பெயரை வைத்து வயதைக் கணக்கிட முடியாது. ‘சஷ்டியப்தப்பூர்த்தி’ என்று 60 ஆண்டை பார்ப்பனர்கள் விழாவாகக் கொண்டாடுவதன் நோக்கம் 60க்கு மேல் ஆண்டுகளுக்கு பெயர் கிடையாது என்பதால்தான், சித்திரையில் தொடங்கும் “தமிழ்ப் புத்தாண்டு” என்று பார்ப்பனர்கள் கூறும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ விபவ சுக்ல பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய பிரமாதி விக்கிரம விஷு சித்திரபானு...