Tagged: சட்ட எரிப்புப் போர்

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...