Tagged: காமன்வெல்த்

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

காமன்வெல்த் : சில தகவல்கள்

காமன்வெல்த் : சில தகவல்கள்

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்து அழுத்தம் பெற்றுவரும் நிலையில் ‘காமன்வெல்த்’ பற்றிய சில தகவல்கள்: பிரிட்டிஷ் காலனியின் கீழ் இருந்த நாடுகள் உருவாக்கிக் கொண்ட அமைப்பே ‘காமன் வெல்த்’. இதில் உறுப்பு நாடுகள் விரும்பி தாமாகவே இணையலாம். விருப்பமில்லா விட்டால் விலகிக் கொள்ளலாம். 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டுக்கு ஏற்பு வழங்கியதை எதிர்த்து பாகிஸ் தான் காமன்வெல்த்திலிருந்து விலகி மீண்டும் 1989 இல் இணைந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட முறைகேடான ஆட்சி நடத்திய குற்றச்சாட்டு களின் கீழ் 2002 ஆம் ஆண்டில் ஜிம்பாவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. அதற்காக 2003 ஆம் ஆண்டில் அந்த நாடு தன்னை விலக்கிக் கொண்டது. அதேபோல் ஜாம்பியா நாடு 2013 அக்டோபரில் காமன்வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது. காமன்வெல்த்துக்கு உறுப்பு நாடுகளை நீக்கி வைக்கும் உரிமை இல்லை. ஆனால், தீவிரப் பங்கெடுப்பிலிருந்து நாடுகளை...