Tagged: கவிஞர் அறிவுமதி

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...