Tagged: ஈழத் தமிழர் பிரச்சினை

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது. 2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில்...