சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்
கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...