மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்
கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....