காங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது?
‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி: கேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா? பதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது. அம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி! எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.” அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன்...