Tagged: அரசியல் சட்டம்

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

மோடி எதிர்ப்பு பரப்புரைக்கு சென்னை மாவட்டக் கழக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பணிக்கான காவல் உதவி ஆணை யாளர், இதற்கான அனுமதி வழங்கும் ஆணையில், கூட்டத்துக்கான அனுமதிக்கு நிபந்தனையாக, “மனு சாஸ்திர புத்தகம் மற்றும் சட்டப் புத்தகங்களை எரிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரசியல் சட்டத்துக்கு சமமானது-மனு சாஸ்திரம்” என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தின் முன் அவைரும் சமம் என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டு சமூகத்தில் ‘பிராமணன்’ மேலானவன், ‘சூத்திரன்’ இழிவானவன் என்று கூறும் மனு சாஸ்திரத்தை சட்டத்துக்கு சமமானதாகக் கருதுகிறது, காவல்துறை. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின் தாக்கத்தை அரசின் இந்த ஆணையில் காண முடிகிறது. ஆனாலும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது தமிழினத்தையே அவமதிப்பதாகும். பெரியார் முழக்கம் 10042014 இதழ்