மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்
குஜராத் கலவரத்தின்போது தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் வந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடும், கலவரப் படம், மனசாட்சியை உலுக்கிப் போட்டது. அப்படி, உயிருக்கு மன்றாடியவர் குத்புதின் அன்சாரி – தையல் கடை நடத்திய ஒரு இஸ்லாமியர். மத வெறியுடன் கத்தியை தூக்கிக் கொண்டு வந்தவர் அசோக் மோச்சி – செருப்பு தைக்கும் தொழிலாளி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நட்புடன் அன்பைப் பரிமாறிக் கொண்ட நிகழ்வு, கேரள மாநிலம் கண்ணூரில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. குத்புதீன் – குஜராத்திலிருந்து இடம் பெயர்ந்து, மேற்கு வங்கத்தில் குடியேறிவிட்டார். நிகழ்ச்சியில் பேசிய குத்புதீன், “குஜராத்தில் மதவெறி தற்காலிகமாக அடக்கப்பட்டுள்ளது. இது மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைப் பதற்குத்தான். என்னைக் கொலை செய்ய வந்த அசோக் மோச்சி மீது எனக்கு பகை இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. இவர்களை மோடி, தனது...