புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்
“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!” இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில்...
