பெரியார் ஒருவர்தான் பெரியார்!
சனவரி 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய சீமான் பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்தும், தமிழ்நாட்டுக்குப் புதிதாக பல பெரியார்களை அறிமுகம் செய்தும் வைத்திருக்கிறார். ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியாரை ‘பெரியார்’ என ஏற்க முடியாது எனக்கூறும் இவர், புதிதாக பட்டியலிட்டிருக்கும் பலர் எத்தனை முரண்பாடுகளாக இருக்கின்றனர் என்பதை தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட இம்மானுவல் சேகரனாரும் பெரியார்! அவர் கொலைக்கு காரணமான பசும்பொன்னும் பெரியார்! “தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து செத்தே போன சங்கரலிங்கனாரும் பெரியார்! பெயர் வைக்க மறுத்த காமராஜரும் பெரியார்!! தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற பெருஞ்சித்திரனாரும் பெரியார்! சமஸ்கிருத மந்திரங்கள் தேவை என்ற மபொசியும்...
